தன்மானத் தமிழா!
கர்நாடகாவில் அங்கே உள்ள ஒரு உச்சநட்சத்திரம் நடித்த திரைப்படம் வெளியாகி, அதே நேரத்தில் நம் தமிழ் நடிகர் நடித்த தமிழ்ப்படம வெளியாகி
கன்னடப்படம் தோல்வியடைந்து, நம் தமிழ்ப்படம் வெற்றியடைந்தால் அங்கே உள்ள கன்னடர்கள் கன்னடப்படத்தை இழிவுபடுத்தி நம் தமிழ்ப்படத்தையும், நம் தமிழ் நடிகரையும் கொண்டாடுவார்களா?
மேலும் இடையில் தமிழ்ப்படங்கள் அங்கே வெளியிடக்கூடாது என்று கன்னடர்கள் போராட்டங்கள் செய்தனர். கலவரம் விளைவித்தனர்.
அதுமட்டுமல்ல தமிழ்படங்களை கன்னடத்தில் டப் செய்து வெளியிடக்கூடாது என்ற நிலையும் தற்பொழுது அங்கே உள்ளது.
ஒரு தமிழ் படம் வெளியாகி அது எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றால் அந்தப் படத்தை பற்றி மட்டும் விமர்சனத்தை வைக்கலாம் தவறில்லை. ஆனால் அதேசமயம் ஒரு கன்னடப் படம் வெளியாகி வெற்றி அடைந்தால் பாராட்டுங்கள் ஒன்றுக்கு பல முறை அப்படத்தை பாருங்கள் தவறில்லை. ஆனால் அந்தப்படத்தை தலையில் வைத்துக் கொண்டாடி, தமிழ் படத்தை இழிவுபடுத்துவதும்,
கன்னட படத்தோடு தமிழ் படத்தை ஒப்பிட்டு தமிழ் படத்தை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதும் தமிழுக்கும், தமிழருக்கும் அழகல்ல.
இங்கே நான் மொழி வெறுப்பை வெளிப்படுத்தவில்லை.
அனைத்து மொழிகளுக்கும் பொதுவானது தான் திரைப்படம்.
இந்திய திரையுலகிலேயே அதிக மொழி மாற்றம் செய்யப்பட்டது தமிழ் படங்கள்தான். இன்றும் இந்தியாவிலேயே தமிழ் சினிமா தலை நிமிர்ந்து நிற்கிறது. முன்னோடியாகவும் இருந்து வருகிறது. சமீபத்தில் ஓரிரு படங்கள் சரிவர வெற்றி அடையாததால் தமிழ் சினிமாவை யாரும் தரக்குறைவாக பேசி விடக்கூடாது, நினைத்து விடவும் கூடாது.
சமீபத்தில் ஓரிரு தெலுங்கு படங்களும் ஓரிரு கன்னட படங்களும் வெற்றி அடைந்ததால் தமிழ் திரை உலகம் பின் தங்கி விட்டதாகவும் தமிழ் இயக்குனர்கள் திறமையற்றவர்களாகவும் விமர்சனம் செய்வது தமிழனை தமிழன் அசிங்கப்படுத்துவதாகும்.
இது நம் தமிழ்மொழியின் கௌரவப் பிரச்சனை.
தமிழா நீ போற்றுவதற்கு ஒரு கன்னடப்படம்தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் போற்றுவதற்கு இங்கு ஆயிரம் தமிழ் படங்கள் இருக்கிறது என்பதை மறவாதே!கன்னட படம் நன்றாக இருந்தால் பார்ப்போம் போற்றுவோம்!
ஆனால் அதோடு ஒப்பிட்டு தமிழ் படத்தை தூற்றுவதை தவிர்ப்போம் ஒரு கன்னட நடிகரை பாராட்டுவோம் அதேசமயம் ஒரு தமிழ் நடிகரை,தமிழனை தரம் தாழ்த்தாதிருப்போம்!
இது கலையையும் தாண்டி தமிழை இழிவு படுத்துவதாகும்.
தமிழ்நாட்டில் பல நடிகர்களுக்கு பல ரசிகர்கள் இருக்கலாம் ஆனால் நாம் எல்லோரும் தமிழர்கள்.தமிழுக்கு ரசிகர்கள்.
தமிழ் ரசிகர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.