குழந்தைகள் நீண்ட நேரம் தூங்காவிட்டால் ஏற்படும் பிரச்சினைகள்

6 மாதம் முதல் 7 வயது வரையிலான குழந்தைகள் போதிய நேரம் தூங்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு உடல் நலக்கோளாறுகள் ஏற்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்காவை சேர்ந்த குழந்தைகள் நல நிபுணர் எல்சி தவேராஸ் ஒரு ஆய்வு மேற்கொண்டார். மொத்தம் 1046 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் 6 மாதம் முதல் 2 வயது வரையிலான குழந்தைகள் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் அயர்ந்து தூங்க வேண்டும். 3 முதல் 4 வயது குழந்தைகள் 11 மணி நேரமும் 5 முதல் 7 வயது வரையிலான குழந்தைகள் தினமும் 10 மணி நேரமும் தூங்க வேண்டும் என கண்டறியப்பட்டது. குறைந்த நேரம் தூங்கும் குழந்தைகளுக்கு நரம்பு பாதிப்பு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பள்ளிக்கு செல்வதற்கு முன்பும், பள்ளியில் படிக்கும் போதும் குழந்தைகளை அதிக நேரம் தூங்க வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.