சிக்லெட்ஸ் விமர்சனம்

எஸ்எஸ்பி பிலிம்ஸ் சார்பில், எஸ் ஸ்ரீனிவாசன் குரு தயாரிப்பில், முத்து இயக்கத்தில், சாத்விக் வர்மா, நயன் கரிஷ்மா, சுரேகா வாணி, ஸ்ரீPமன், மனோபாலா, ஜாக் ராபின்சன், அம்ரிதா, மஞ்சிரா, ராஜ கோபால், ரசீம் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் சிக்லெட்ஸ்.

அம்ரிதா ஹால்டர், நயன் கரிஷ்மா, , மஞ்சீரா, இவர்கள் மூன்று பேரும் சிறுவயதிலிருந்தே தோழிகளாக இருக்கிறார்கள். இவர்கள் மூன்று பேரும் ஒரே பள்ளியில் படித்து வருவதால் இவர்களின் பெற்றோர்களும் நண்பர்களாக இருக்கிறார்கள்.

பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்பை தொடங்கும் பெண்கள், தங்களது வயது கோளாறின் காரணமாக காதல், டேட்டிங் போன்ற செல்களில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்கள்.

அதே சமயம், பிள்ளைகள் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று பிள்ளைகளின் மேல் கனவு வைத்திருக்கிறார்கள்.

அம்ரிதா ஹால்டர், நயன் கரிஷ்மா, , மஞ்சீரா மூன்று பேரும் தாங்கள் விரும்பும் நபர்களை தேர்வு செய்து அவர்களுடன் ஊர் சுற்றி ஜாலியாக இருப்பதற்காக பெற்றோர்களிடம் பொய் சொல்லிவிட்டு போகிறார்கள்.

பெற்றோர்களும் பிள்ளைகளை நம்பி அனுப்பி வைக்கிறார்கள்.  இவர்கள் பொய் சொல்லிவிட்டு ஊர் சுற்ற போயிருக்கிறார்கள் என்ற உண்மை தெரிய வர, தங்களுடைய பிள்ளைகளை தேடி செல்கிறார்கள் கடைசியில் பிள்ளைகளை கண்டுபிடித்தார்களா? இல்லையா? பெற்றோர்களின் கனவு பலித்ததா? இல்லை பிள்ளைகளின் ஆசையை நிறைவேறியதா? என்பதே ‘சிக்லெட்ஸ்’ படத்தோட மீதி கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

ஒளிப்பதிவு : கொளஞ்சி குமார் 

இசை : பால முரளி பாலு 

படத்தொகுப்பு : விஜய் வேலு குட்டி 

மக்கள் தொடர்பு : யுவராஜ்