காமநாயக்கன்பட்டி புனிதபரலோக மாதா ஆலய விண்ணேற்பு விழா – 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

 

கோவில்பட்டி அருகேயுள்ளது காமநாயக்கன்பட்டி. இங்கு 1666ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புனித பரலோக மாதா கிறிஸ்துவ திருத்தலம் உள்ளது. தமிழில் தேம்பாவணி என்ற ஒப்பற்ற காவியத்தை தந்த வீரமாமுனிவர் இந்த திருத்தலத்தில் 7வது பங்குதந்தையாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. புகழ்பெற்ற புனித பரலோக மாதா தேவலாயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் விண்ணேற்பு விழா மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்தாண்டுக்கான திருவிழா குறித்து இந்த ஆலயத்தின் பங்குதந்தை அருள்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில் வரும் 6ஆம் தேதி விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கொடியேற்றத்தின் போது தாயே என்ற குறுத்தகடும், காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதவின் திருத்தல வரலாறு என்ற புத்தகமும் வெளியிடப்படவுள்ளதாகவும், 10 நாள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலி, பிரத்தனை கூட்டங்களும் நடைபெறவுள்ளதாகவும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி ஆகஸ்ட் 15ஆம் தேதி அதிகாலை நடைபெறவுள்ளதாகவும், அத்துடன் திருவிழா நிறைவு பெறுவதாகவும், விழாவிற்கு வரும் அனைவக்கும் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சந்திப்பின் போது உதவி பங்கு தந்தை அலெக்சாண்டர் உடனிருந்தார்.