பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7பேரையும் விடுதலை செய்ய மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – திரைப்பட இயக்குநர் வ.கௌதமன்

கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை கெச்சிலபுரத்தில் செந்தில்மள்ளருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் திரைப்பட இயக்குநர் வ.கௌதமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பேரறிவாளனுக்கு 1 மாதம் பரோல் வழங்கப்பட்டாலும் அவரை சுற்றி எப்போதும் காவல்துறை இருப்பதால் அவர் சிறையில் இருக்கும் சூழல் போன்றது காணப்படுகிறது. விரைவில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7பேரையும் விடுதலை செய்ய மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும் என்ற சொல் வரவேற்க கூடியது, அது அரசியல் விளையாட்டு செல்லாக இல்லமால் நடைபெற்றால் நல்லது, நெடுவாசல், கதிராமங்கலம், நீட் தேர்வு , காவிரி மேலாண்மை அமைக்கமால் இருப்பது என தமிழக வாழ்வாதரம் மற்றும் உரிமைகள் பாதிக்கப்பட்டதற்கு மத்திய பா.ஜ.க அரசு தான் காரணம், தர்மயுத்தம், ஊழல் ஆட்சி என்று கூறிய ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இணைந்தது எப்படி, இவர்கள் தங்கள் பதவிக்காக மற்றவர்கள் பேச்சை கேட்டு நடக்கலாம், ஆனால் 10 கோடி தமிழர்கள் நடக்க முடியாது, சட்டமன்ற தேர்தல் வரும் போது தக்க பதிலடி கொடுப்போம் என்றார்.