அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் நிம்மி ராமானுஜம் மற்றும் குழுவினர் கருப்பை புற்றுநோயை கண்டறியும் சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள் .
இவர்களது முயற்சியால் மருத்துவமனைக்கு போகாமலே வீட்டில் இருந்த படியே பெண்கள் அவர்களாகவே வலி ஏதுமின்றி கருப்பை புற்றுநோய் உள்ளதா என்பதை கண்டறியும் பாக்கெட் சொல்போஸ்கோப் என்ற கருவியை உருவாக்கியுள்ளனர். இவர்கள் உருவாக்கிய இந்த கருவியின் மூலம் 80 சதவீதம் சரியாக நோயை கண்டறிய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.