மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் மாநில வாரியாக படித்த மாணவர்களுக்கு 85 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்திருந்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும் புதிய தரவரிசை பட்டியலை தயாரித்து வெளியிடவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை மறுநாள் நடைபெறயிருந்த மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு தாமதமாக வாய்ப்பு உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவு குறித்து சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உயர் அதிகாரிகளுடனுன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முயற்சிகளை மேற்கொள்ளும் என்று தகவல்கள் சொல்லப்படுகிறது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் தமிழக மாணவர்கள் மத்தியில் எப்போது கலந்தாய்வு நடைபெறும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வால் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் இழுபறி நீடிக்கிறது.