ஜியோ போட்டியை எதிர்கொள்ள பி.எஸ்.என்.எல். சார்பில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.249 செலுத்தினால் தினமும் 10 ஜிபி வரையிலான தரவுகளை டவுன்லோடு செய்ய முடியும் என பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகபட்ச டேட்டா மட்டுமின்றி அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் தினமும் இரவு 9.00 மணி முதல் காலை 7.00 மணி வரை வழங்கப்படுகிறது. ஞாயிற்று கிழமைகளிலும் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி இந்த சலுகையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். புதிய சலுகைகள் புதிய பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை சேர்க்கவே அறிவிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. ‘வயர்லைன் பிராட்பேண்ட் மூலம் இந்தியாவில் நாள் ஒன்றிற்கு 10 ஜிபி அளவு டவுன்லோடு டேட்டா வழங்கும் ஒரே நிறுவனம் பி.எஸ்.என்.எல். மட்டுமே’, என அந்நிறுவனத்தின் தலைவர் என்.கே. குப்தா தெரிவித்துள்ளார்.