பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில் உருவாகி வரும் ரொமான்டிக் ஃபேன்டஸி த்ரில்லர் திரைப்படம் **’சிட்டுக்குறிஞ்சி’**யின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன.
காதல், நகைச்சுவை மற்றும் ஃபேன்டஸி அம்சங்களை வித்தியாசமான திரைக்கதையுடன் இணைத்து உருவாகும் இப்படத்தில் ரஜித் மேனன் கதாநாயகனாக நடிக்கிறார். தீப்ஷிகா, நக்ஷா சரண், வி.ஜே. பப்பு, ஜி.எம். குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீராம் கார்த்திக் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
1983-ஆம் ஆண்டை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்திற்காக, கொடைக்கானல் பள்ளங்கி மலைப்பகுதியில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான கிராம செட் அமைக்கப்பட்டு, அந்தக் காலகட்டத்தின் சூழல் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.
அறிமுக இசையமைப்பாளர் மாறா இசையமைக்க, படத்தின் பின்னணி இசை ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் உள்ள Budapest Scoring Company ஸ்டுடியோவில் சர்வதேச இசைக் கலைஞர்கள் பங்கேற்ற LIVE ஆர்கெஸ்ட்ரா மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரான்சிஸ் ராஜ்குமார் A. ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். டி. ஜூட் ஆனந்த் தயாரித்துள்ள இப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.


