பிக்பாஸ் நிகழ்ச்சியால் கலச்சார சிரழிவு ஏற்படுவதால் அதற்கு தடை கோரி வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடைகோரும் வழக்கில் கமலஹாசன் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
பதில் மனுவில், “பிக்பாஸ் நிகழ்ச்சியால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படவில்லை. இந்த வழக்கில் தமிழக அரசை சேர்த்தது தவறு, மத்திய அரசு அல்லது கண்காணிப்பு குழு மட்டுமே ஆராய முடியும்!” எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மத்திய அரசு பதிலளிக்க ஒருவாரம் அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம், விசாரணையை ஒத்திவைத்துள்ளது.