விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றி பேசாதவர் யாருமில்லை. அந்த வகையில் நேற்று நமீதா ஆங்கிலத்தில் ஒரு கவிதை எழுதி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகை நமீதா சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் இந்த கவிதையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார் என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.
அவர் கவிதையின் தமிழாக்கம்
நீ காலையில் புன்சிரிப்புடன் எழுவாய். இன்றைய நாள் சிறப்பாக இருக்க நினைப்பாய். ஆனால், யாரோ ஒருவர் வந்து உன் நிம்மதியை கெடுப்பர்.
அதையும் பொறுத்துக்கொண்டு நீ அந்த நாளை தொடரும் போது, மீண்டும் உன்னை தாக்குவர்.
உனக்கென்று ஒரு சுய மரியாதை இருப்பதால், ஒரு கட்டத்தில் பொறுமை இழப்பாய். உன்னை பற்றி அவர்கள் பேசுவது உனக்கு கேட்கும்.
அந்த நிகழ்ச்சியின் இயக்குநர்கள் ஏமாற்றுவதில் வித்தகர்கள்.
உனக்குள் இருந்த நம்பிக்கை நரகமாக மாறும்.
ஒரு முழு நாளை ஒரு மணி நேரமாக மற்றும் பொழுது, அதில் இருப்பது பாதி உண்மை மட்டுமே… நீங்கள் அனைவரும் இதுவரை பார்த்தது அந்த பாதி உண்மையைத் தான்.
நீங்கள் அதை ஒரு நிகழ்ச்சியாக பார்க்கிறீர்கள், கவனிக்கவில்லை.
மேலும், இந்த வரிகளை உங்களால் புரிந்து கொள்ள முடியும்!
இவ்வாறு உள்ளது அந்தக் கவிதை. இதன் மூலம் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் அனைத்தையும் சூசகமாகச் சொல்லியிருக்கிறார் நமீதா. இந்த கவிதையில் நமீதா குறிப்பிடும் பெண் ஓவியாவாக இருக்கலாம். நமீதாவின் இந்த கவிதை பிக்பாஸ் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.