ரூ.10 முகமதிப்பு கொண்ட புதிய பங்குகள் வெளியீடு – பந்தன் பேங்க் லிமிடெட்

பந்தன் பேங்க் லிமிடெட் (Bandhan Bank Limited – the “Company” or the “Issuer”), வியாழக்கிழமை மார்ச் 15, 2018 அன்று 119, 280,494 சம பங்குகளை வெளியிட (the “Offer”) திட்டமிட்டுள்ளதுஇதில், 97,663,910 சம பங்குகள் புதிதாக வெளியிடப்படுகிறதுஆஃபர் பார் சேல் மூலம் ஐஎஃப்சி 14,050,780 சம பங்குகளையும் ஐஎஃப்சி எஃப்ஐஜி 7,565,804 சம பங்குகளையும் (collectively, the “Selling Shareholders” and such Equity Shares offered by the Selling Shareholders, the “Offered Shares”) (“Offer For Sale”). விற்பனை செய்கிறது.

பங்கு ஏலம் / வெளியீடு மார்ச் 19, 2018 நிறைடைகிறது. சம பங்கு ஒன்றுக்கு ரூ. 370 முதல் ரூ. 375 விலைப்பட்டை ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுகுறைந்தபட்சம் 40 பங்குகள் மற்றும் அதன் மடங்குகளில் விண்ப்பிக்க வேண்டும்.

இந்தச் சம பங்குகள் மார்ச் 7, 2018 அன்று தேதியிட்ட பங்கு வெளியீட்டு ஆவணத்தின்  அடிப்படையில்  வெளியிடப் படுகிறது. இந்தப் பங்குகள் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட இருக்கிறது.

இந்தப் பங்கு வெளியீட்டின் முன்னணி மேலாளர்களாக (BRLMs) கோட்டக் மஹிந்திரா  கேப்பிட்டல் கம்பெனி லிமிடெட், ஆக்ஸிஸ் கேப்பிட்டல் லிமிடெட், கோல்டுமேன் சாக்ஸ்  (இந்தியா) செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடேட், ஜேஎம் ஃபைனான்சியல் விமிடெட்ஜே.பிமார்கன் இந்தியா பிரைவேட் லிமிடெட் போன்றவை உள்ளன. கார்வி கம்ப்யூட்டர் ஷார் பிரைவேட் லிமிடெட்இந்த வெளியீட்டின் பதிவாளர் (the registrar to the issue) ஆக உள்ளது.

நிறுவனத்தின் பங்கு மூலதனத்தில் (Equity Share capital) குறைந்தபட்சம் 10% பொது மக்களுக்கு  விற்பனை செய்யப்படுகிறதுஇந்தியப் பங்குச் சந்தையை நெறிப் படுத்தும் செபி அமைப்பின்  விதி முறைகளுக்கு உட்பட்டு இந்தப் பங்கு ஏலமுறையில் ( Book Building Process) விற்பனை செய்யப்படுகிறது. மொத்தம் விற்பனைக்கு உள்ள பங்குகளில், 50 சதவிகிதத்துக்கு மேற்படாமல் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு (Qualified Institutional Buyer – QIB) ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில்கியூஐபி முதலீட்டாளர்கள் பிரிவில் 5 சதவிகிதம் மட்டும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகிறதுமேலும், 15 சதவிகிதத்துக்கு  குறையாத பங்குகள் நிறுவனம் சாரா முதலீட்டாளர்களுக்கு (Non-Institutional Bidders) வழங்கப்படுகிறது. சிறு முதலீட்டாளர்களுக்கு (Retail Individual Bidders) 35%க்கு குறையாமல் பங்குகள் விற்பனை செய்யப்படுகிறது.

அனைவருக்கும் அஸ்பா (ASBA – Applications Supported by Blocked Amount) முறையில் பங்குகள் விற்பனை செய்யப்படும். இந்த முறையில் பங்குகள், ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டுமே முதலீட்டாளர்கள்வங்கி கணக்கிலிருந்து (SCSB) பணம் எடுக்கப்படும். அதே நேரத்தில், விண்ணப்பத்துக்கான தொகைவங்கி கணக்கில் முடக்கி (Blocked) வைக்கப்பட்டிருக்கும்.