சிதம்பரம் இயக்கத்தில், ஃபர்ஸானா பாலதிங்கல், ஆதிசேஷன் கே.ஆர், ஜினன், ஜீன் பால் லால், கிரிஷ் ஏ.டி. மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் பாலன் தி பாய்.
நாயகி ஃபர்ஸானா தன்னுடைய கணவனின் சித்திரவதைகள் தாங்க முடியாமல் கணவனை கொலை செய்த குற்றத்திற்காக கர்ப்பிணியாக இருக்கும் நேரத்தில் சிறைக்கு செல்கிறார்.
சிறையிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறார். ஐந்து வருடங்களுக்கு பாலியல் தொழில் செய்து சிறைக்கு வந்த ஒரு பெண்ணின் உதவியோடு வெளியே வருகிறார்.
தன்னுடைய ஐந்து வயது மகனை அழைத்துக் கொண்டு பல இடங்களில் பல பெயர்களில் வேலை செய்து வாழ்ந்து வருகிறார்கள் இருவரும். வேலை செய்யும் இடத்தில் யாருக்கேனும் சந்தேகம் வந்தால் உடனே வேறு இடத்திற்கு மாறி அங்கு வேலை செய்து வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் பேருந்து நிலையத்தில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவி செய்ய போகும் போது அந்த பெண்ணிடம் இருக்கும் அடையாள அட்டையை பயன்படுத்தி வயதான பாட்டியை பார்த்து கொள்ளும் வேலைக்காக அங்கு செல்கிறார்.
அங்கே அந்த வயதான பாட்டி மட்டுமே இருப்பதால் அங்கே தன் மகனுடன் தங்கிவிட நினைக்கிறார். அவர் நினைத்தது போலவே தன் மகனை பள்ளியில் சேர்த்துவிட்டு அங்கேயே இருந்து வருகிறார்கள்.
ஒரு சூழ்நிலையில் அந்த பாட்டி இறந்து விடுகிறார்.
சிறையில் இருந்து வெளியில் வந்த அந்த பாலியல் தொழில் செய்யும் பெண்ணும் பர்ஸானாவை கண்டுபிடித்து வீட்டிற்கு வந்து விடுகிறார்.
அந்தப் பாட்டியின் மகனும் வெளிநாட்டிலிருந்து வந்து விடுகிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது? அந்த பாட்டி இறந்ததற்கு காரணம் யார்? அந்த பாலியல் தொழில் செய்த பெண் பர்ஸானாவை என்ன செய்தார்? அந்த சிறுவனின் நிலை என்னவானது? என்பதே பாலன் தி பாய் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்குனர் : சிதம்பரம்
எழுத்தாளர் : ஜித்து மாதவன்
தயாரிப்பாளர்கள் : வெங்கட் கே நாராயணா (கேவிஎன் புரொடக்ஷன்ஸ்) & ஷைலஜா தேசாய் ஃபென் (தெஸ்பியன் பிலிம்ஸ்)
ஒளிப்பதிவாளர் : ஷைஜு காலித்
இசை : சுஷின் ஷ்யாம்
எடிட்டர் : விவேக் ஹர்ஷன்
தயாரிப்பு வடிவமைப்பாளர் : அஜயன் சல்லிசேரி
மக்கள் தொடர்பு : ஏ. வெங்கடேஷ்

