ஆசிய தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் இரண்டு பேருக்கும் பரிசு தொகையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பேரவையில் அறிவித்தார். ஆசிய தடகளப் போட்டியில் 2 தங்கப்பதக்கங்களை வென்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணனுக்கு ரூபாய் 20 லட்சம் பரிசு தொகையும், மேலும் வெள்ளி பதக்கம் வென்ற திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆரோக்கியராஜுக்கும் ரூபாய் 15 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். ஆசிய தடகள போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் இருவருக்கும் முதல்வர் பழனிசாமி பாராட்டுகளையும் தெரிவித்தார்.