குடும்ப நலத்துறையில் சிறப்பாக செயல்பட மருத்துவமனைகளுக்கு வேலூர் மாவட்டத்தில் விருதுகள்

குடும்ப நலத்துறையில் சிறப்பாக செயல்பட மருத்துவமனைகளுக்கு வேலூர் மாவட்டத்தில் விருதுகள்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் உட்பட்ட பல்வேறு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட்டத்திற்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் நடைபெற்ற விழாவில் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கினார்.

இதனையடுத்து இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் அவர்களிடம் பரிசு பெற்ற அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் பரிசுகள் மற்றும் விருதுகளுடன் சென்று ஆசிர்வாதம் பெற்றனர். இதில் குடும்ப நலத்துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.