அரிமாபட்டி சக்திவேல் விமர்சனம்

லைப் சைக்கில் கிரியேஷன்ஸ் சார்பில், அஜிஸ்.பி, & பவன் கே தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரமேஷ் கந்தசாமி இயக்கத்தில், பவன், மேக்னா, சார்லி, பிர்லா போஸ் , அழகு, சூப்பர் குட் சுப்ரமணி ஆகியோர்கள் நடிப்பில் வெளி வந்துள்ள படம் “அரிமாபட்டி சக்திவேல்”

1995-இல் திருச்சி அருகில் இருக்கும் அரிமா பட்டி கிராமத்தில் காதலை வெறுக்கும், காதல் திருமணத்தை வெறுத்தும் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த கட்டுப்பாட்டை மீறி கதாநாயகன் சக்திவேல் வேறு ஒரு சமூகத்தை சேர்ந்த கதாநாயகி மேக்னாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.

இந்த ஊரில் இருந்தால் வாழ விட மாட்டார்கள் என்று வெளியூருக்கு சென்று வாழ விரும்புகிறார்கள். இந்த விஷயம் தெரிந்த மேக்னாவின் அண்ணன் பிர்லா போஸ் சக்திவேலின் கிராமத்திற்கு சென்று, பிரச்சனை செய்கிறார். தன் தங்கையை உங்கள் மகன் காதல் திருமணம் செய்து கொண்டான் என்று கூறி அவன் எங்கே இருக்கிறான் என்று சண்டை இடுகிறார்.

நீங்களே சொன்னாலும் உங்கள் பெண்ணை எங்கள் ஊரில் வாழ விட மாட்டோம், நாங்களே கண்டுபிடித்து தருகிறோம் என்று கூறி அந்த ஊர் தலைவர்கள் அனுப்பி வைக்கிறார்கள்.

சக்திவேலன் திருமணத்திற்கு உதவி செய்த அவரின் நண்பர்கள் குடும்பத்திற்கு அபராதம் விதித்து மன்னித்து அனுப்பி விடுகிறார்கள். சக்திவேலின் தந்தையான சாரலியிடம் உன் மகனை ஒதுக்கி வைத்தால், ஊரில் இருக்கலாம் என்று நிபந்தனை வைக்க, அவரும் எனக்கு ஊர் தான் முக்கியம் என்று கூறி சென்று விடுகிறார்.

ஊருக்கு வரும் சக்திவேலுவை, அவரது குடும்பமும் ஊர் மக்களும் ஏற்றுக் கொண்டார்களா? இல்லையா? என்பதே அரிமாப்பட்டி சக்திவேல் படத்தோட மீதி கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்குனர் – ரமேஷ் கந்தசாமி
கதை திரைக்கதை – பவன் K
ஒளிப்பதிவு – JP மேன்
இசை : மணி அமுதவன்
படத்தொகுப்பு : ஆர் எஸ் சதீஷ்குமார் தயாரிப்பு : லைப் சைக்கிள் கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர்கள் : அஜித் P, பவன் K
மக்கள் தொடர்பு : யுவராஜ்