ஏரியல் மற்றும் ஹலோ இங்கிலீஷ் செயலி இணைந்துபாலின பேதத்தை தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை செயலி மூலம் பரப்புகிறது #SHARETHELOAD

சென்னை, ஜூன் 3, 2019: ஏரியல் – முன்னணி சலவை பிராண்ட், இது பி&ஜி நிறுவனத் தயாரிப்பாகும். இந்நிறுவனம் உலகின் இரண்டாவது பெரிய செயலி மூலம் ஆங்கிலம்
கற்பிக்கும் ஹலோ இங்கிலீஷ் நிறுவனத்துடன் இணைந்து செயலி மூலம் கற்பவர்களுக்கு
வாழ்க்கைக்கு அடிப்படை அவசியமான திறமைகளை கற்றுத்தரவும் இதன் மூலம் இந்திய
குடும்பங்களில் நிலவும் பாலின பேதத்தை தவிர்க்கவும் முயற்சி செய்துள்ளது. இதற்காக
ஏரியல் நிறுவனம் சமீபகாலமாக புதிய பிரசாரமாக Sons#ShareTheLoad எனும் வாசகத்தை
தனது டிடர்ஜென்ட் பிராண்ட் வாயிலாக மேற்கொண்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் துணி
துவைப்பதும், சமைப்பதும் பெண்களுக்கான வேலை மட்டுமல்ல என்ற புரிதலை உணர்த்திவருகிறது. அத்துடன் ஒருங்கிணைந்து கற்பதன் பலனையும் விளக்குகிறது. இதற்காக
ஹலோ இங்கிலீஷ் செயலி மூலம் மகன்களுக்கு எப்படி கற்பிப்பது மற்றும் எதிர்கால படிப்பு
குறித்து சரியான வழிகாட்டுதலை அளிக்கிறது. மாணவர்களுக்கு கல்வியை போதிக்கும்
அதேசமயம் அவர்களிடம் வாழ்வியல் மதிப்புகளை உணர்த்துவதே #ShareTheLoad-ன் முக்கிய
நோக்கமாகும். இதன் மூலம் இளம் தலைமுறையினர்வாயிலாக எதிர்காலத்தில் மிகச்சிறந்த
சமூக மாற்றத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

ஹலோ இங்கிலீஷ் செயலி மற்றும் ஏரியல் ஆகியன இணைந்து பாலின பேதத்தை தவிர்க்கும்
பிரசாரத்தை தென்னிந்திய நடிகை நிக்கிகல்ராணி மூலமாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
#ShareTheLoad மூலம் சமூகத்தின் புரிதலை உணர்த்துவது முக்கிய நோக்கம். ஹலோ இங்கிலீஷ் செயலியானது இளம் மாணவர்களுக்கு மட்டுமல்ல இது இல்லத்தரசிகளுக்கும், தாய்மார்களுக்கும், இளம் தொழில் முறையினருக்கும்மிகவும் உபயோகமானது. இந்த செயலியின் கற்பித்தல் பாணியின் மூலம் புதிய முறையிலான கற்பித்தல் முறையை பின்பற்றுகிறது. இந்த கற்பித்தல் முறை மூலம் இந்திய வீடுகளில் பாலின பேதத்தை முற்றிலுமாக போக்குவதே நோக்கமாகும்.

ஹலோ இங்கிலீஷ் செயலியானது ஆங்கிலத்தை இந்தியாவில் உள்ள 12 மொழிகளின் வாயிலாகக் கற்றுத்தருகிறது. ஹிந்தி, தமிழ், பெங்காலி மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட மொழிகள் மூலம் ஆங்கிலம் கற்கலாம். வழக்கமான ஆங்கிலம் கற்பித்தல் பாணியில் ஆடியோ பாடங்கள், விளையாட்டு, செய்தி அடிப்படையிலான க்விஸ் உள்ளிட்ட மூலமாக கற்பிக்கப்படுகிறது.
ஏரியல் தனது விருது வென்ற இயக்கத்தின் மூலம் தேசிய அளவில் பாலின பேதத்தை
தவிர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெற்றோருக்கும்
சமூகமாற்றத்தை ஏற்படுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. ஹலோ இங்கிலீஷ்
செயலியானது பெற்றோருக்கும் குழந்தைக்கும் இருபாலினத்தை ஒரேஅணியில் திரட்டுவதற்காக உருவாக்கப்பட்டது தான் #ShareTheLoad

இதுகுறித்து முன்னணி தென்னிந்திய நடிகை நிக்கிகல்ராணி கூறியது: “ஹலோ இங்கிலீஷ்
உடன் இணைந்து ஏரியல் மேற்கொண்டுள்ள இந்தமுயற்சி என்னை வெகுவாக கவர்ந்தது.
அதிலும் குறிப்பாக பாலினசமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.அடுத்த தலைமுறையினர் மிகச்சிறப்பான வளர்ச்சியை
எட்டுவதற்கு மிகச்சிறப்பான கல்வியறிவு மிகவும் அவசியம். அத்துடன் வாழ்க்கை குறித்த
புரிதலும் மிகவும் அவசியம். அப்போது தான் அவர்களுடைய எதிர்காலம் வளமானதாக
அமையும். இந்த செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வீடுகளில் நிலவும்
குடும்பச் சுமையை எப்படி பகிர்ந்து கொள்வது என்பதையும் புரியவைக்கும். பெண்களைப்
பொறுத்தமட்டில் ஒரு கூடை நிறைய அழுக்குத் துணிகளை வெளுப்பதும், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதும் சவாலான விஷயமாக உள்ளது. சிறுவர்களைப் பொறுத்தமட்டில் வீடுகளில் உள்ள சவாலான விஷயங்களை ஒருபோதும் கண்டு கொள்வதேயில்லை. ஹலோ இங்கிலீஷ் செயலியை பயன்படுத்துபவர்களுக்கு ஒருவிஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதாவது மொழியைக் கற்பதில் உங்களுக்குள்ள அச்சம் நிச்சயம் இதன் மூலம் விலகும். வீடுகளில் உள்ள சுமைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் அதாவது #ShareTheLoad மூலமாக. இதன் மூலம் உங்களது தன்னம்பிக்கை அதிகரிப்பதை உணர்வீர்கள். தாய்மார்களுக்கு இதன் மூலம் ஒரு செய்தி, உங்களது மகனை நீங்கள், உங்கள் பெண்ணைப் போல வளர்க்கத் தயங்காதீர்கள். அவர்களுக்கும் வீட்டுவேலைகளைக் கற்றுக்கொடுங்கள்,’’.

அர்விந்த்குமார், லீட்சேல்ஸ், ஹலோ இங்கிலீஷ் செயலி கூறியது: “நாங்கள் உருவாக்கியுள்ள
செயலியானது அன்றாட நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. ஏரியல் உடனான இணைப்பின் மூலம் மிகவும் வளமான சமத்துவ சமுதாயத்தை எதிர்காலத்தில் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. நுகர்வோரின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதில் ஏரியல் மிக முக்கிய பங்காற்றுகிறது. அத்துடன் மகிழ்ச்சியான இல்லங்களை உருவாக்குவதில் முனைப்பாக உள்ளது. இதற்கு முக்கியமாக குடும்ப உறுப்பினர்கள் தங்களது குடும்ப பொறுப்புகளை பகிர்ந்தளிப்பதில் தான் அடங்கியிருக்கிறது. ஹலோ இங்கிலீஷ் செயலியானது அனைத்து நகரமக்களுக்கு கற்பித்தல் முறையை மிகவும் எளிமையாக்கியுள்ளது. துணி துவைப்பது என்ற பாலினம் சார்ந்த பணியை அலுவலகத்தைப் போல வீடுகளிலும் இரு பாலரும் செய்யலாம் என்ற முயற்சியை ஏரியல் வெகுநேர்த்தியாக மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் சமூகத்தில் மட்டுமின்றி வீடுகளிலும் ஏற்றத்தாழ்வு மற்றும் பாலின பேதத்தை தவிர்க்கும் முயற்சியில் ஏரியல் ஈடுபட்டுள்ளது. அந்த பிராண்டுடன் நாங்கள் இணைந்துள்ளதோடு ஏற்கெனவே எங்களது பாடத்திட்டத்திலும் சமத்துவ சமுதாய வளர்ச்சி சார்ந்த படிப்புகள் இடம் பெற்றுள்ளன. சமத்துவ சமுதாயம் உருவாக்கும் இந்த முயற்சியில் ஒருங்கிணைந்திருப்பதை மிகவும் பெருமையாகக் கருதுகிறோம். இணைந்த இம் முயற்சி மூலம் எங்களது செயலி வாயிலாக வீடுகளில் சமத்துவம் மலரும்.’’

நிக்கிகல்ராணி 73 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்ததை வெளிப்படுத்தும் பதாகை ஏந்தி,
இது ஏரியல் sons#ShareTheLoad இயக்கத்துக்கு கிடைத்த வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த முயற்சியானது ஜனவரி 24,2019-ல் தொடங்கப்பட்டது. 2015-ம் ஆண்டிலிருந்தே வீடுகளில் நிலவும் ஏற்றத்தாழ்வை போக்கும் முயற்சியில் ஏரியில் ஈடுபட்டுள்ளது. 2019-ல் sons #ShareTheLoad பிரசாரம் மூலமாக ஏரியல் தொடர்ந்து சில கேள்விகளை எழுப்பியுள்ளது.

நமது வீடுகளில் பெண் குழந்தைகளுக்கு சொல்லித்தரும் விஷயங்களை ஆண் குழந்தைகளுக்கு
சொல்லித் தருகிறோமா? வீடுகளில் பொதுவாக ஆண் குழந்தைகளை செல்லமாகவும் பெண்
குழந்தைகளுக்கு அதிக வேலைப்பளு அளிப்பதையும் போக்கும் முயற்சியை எடுத்துவருகிறது.

இதன் ஒரு பகுதியாக வீட்டினுள் துணி துவைப்பதை பெண்களுக்கான வேலை மட்டுமல்ல,
இதில் ஆண்களும் ஈடுபடலாம் என்பதை பிரசாரமாக வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக
சமையல் மட்டும் பெண்களுக்கானதல்ல என்பதையும் உணர்த்திவருகிறது. இந்த விழிப்புணர்வு மூலம் சமத்துவமான சமுதாயத்தை எதிர்காலத்தில் உருவாக்க முடியும் என்பதை ஏரியல் உறுதியாக நம்புகிறது. முதல் கட்டமாக துணி துவைப்பது சிரமமானதல்ல, அதை ஆண்களும் செய்யலாம் என்பதை உணர்த்தி வருகிறது. இதற்காக பெண்கள் துவைத்தால் மட்டும் துணி வெளுப்பதில்லை, ஏரியல் மூலம் ஆண்கள் துவைத்தாலும் துணி வெளுக்கும் என்பதை பிரசாரமாகவே ஏரியல் மேற்கொண்டுள்ளது.

இந்தபிரசாரத்தில்இணையுங்கள் Ariel Sons #ShareTheLoad

#ShareTheLoadபற்றி

ஏரியல் #ShareTheLoad இயக்கமானது இந்தியாவில் தொடங்கப்பட்டது. இதன் நோக்கமே வீடுகளில் சமத்துவ சூழலை உருவாக்குவதுதான் 2015-ம் ஆண்டு ஏரியல் மிக முக்கியமான ஒரு கேள்வியை எழுப்பியது – துணிகளை பெண்கள் தான் துவைக்கவேண்டுமா? வீடுகளில் நிலவும் பாலின பேதத்தை ஒழிக்கும் வகையில் இந்த கேள்வி முன்வைக்கப்பட்டது. வீட்டு வேலைகளை பெண்கள் அதிகம் சுமக்கும் சூழலை போக்குவதே இதன் பிரதான நோக்கமாகும்.

2016-ல் அப்பாக்களும் குடும்பச்சுமையை பகிரலாம் என்பதாக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது துணி துவைப்பது பெண்களுக்கானது மட்டுமல்ல ஆண்களும் செய்து, குடும்பசுமையைக் குறைக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. ஒருதலை முறைமுழுவதும் ஆண்கள் உயர்ந்தவர்கள், வீட்டுவேலைகளை பெண்கள்தான் செய்யவேண்டும் என்றிருந்தநிலையை மாற்றும் முயற்சியாக இது செயல்படுத்தப்பட்டது.

இந்தபிரசாரத்துக்கு ஓரளவு பயனும் கிடைத்துள்ளது. 2015-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட
ஆய்வில் 79% ஆண்கள் வீட்டுவேலைகள் முழுவதும் பெண்களுக்கானது என்ற எண்ணத்திலிருந்தனர். 2016-ம் ஆண்டில் இது 63% ஆகக்குறைந்தது. வீட்டுவேலைகள்
இல்லத்தரசிகள் மற்றும் பெண்குழந்தைகளின் வேலை என்றும், அலுவலகத்துக்கு செல்வது
ஆண் மற்றும் மகனின் வேலை என்றும்கருதினர். 2018-ம் ஆண்டில் இந்த எண்ணம் 52%
ஆகக்குறைந்து விட்டது. இந்த முயற்சியில் கணிசமான முன்னேற்றம் எட்டப்பட்ட போதிலும்
பாலினபேதம் ஒழிந்து சமத்துவம் ஏற்பட இன்னும் பலபடிகள் செல்லவேண்டியுள்ளது. அதன்
ஒரு முயற்சியாக #ShareTheLoad எனும் பிரசாரம் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. அதில்
தற்போது கூடுதலாக Sons#ShareTheLoad எனும் பிரசாரம் ஏரியல்வாயிலாக துணிதுவைப்பது
அனைவருக்கும் எளிது என்பதன் மூலம் பிரசாரம் செய்யப்படுகிறது.

பிராக்டர் அண்ட் கேம்பிள் இந்தியா பற்றி
பி&ஜி இந்திய நுகர்வோர்களுக்கு மிகச்சிறந்த நம்பகமான தயாரிப்புகளை உரியதரத்தோடு
அளித்து முன்னணி பிராண்டாகத்திகழ்கிறது. இந்நிறுவனத் தயாரிப்புகளில் விக்ஸ், ஏரியல்,
டைட், விஸ்பர், ஓலே, ஜில்லெட், ஆம்பிபுர், பேம்பர்ஸ்பான்டீன், ஓரல்-பி,
ஹெட்அண்ட்ஷோல்டர்ஸ், ஓல்டுஸ்பைஸ் ஆகியன அடங்கும். பி&ஜி 3 நிறுவனமாக
இந்தியாவில் செயல்படுகிறது. இவற்றில் 2 நிறுவனங்கள் என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ
சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன. பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் – பிராக்டர் அண்ட்
கேம்பிள் ஹைஜீன் அண்ட் ஹெல்த்கேர் லிமிடெட் மற்றும் ஜில்லெட் இந்தியாலிமிடெட்.
பங்குச்சந்தையில் பட்டியலிடப் படாதவை (இந்நிறுவனத்தில் 100% பங்குகளும்
அமெரிக்காவில் உள்ள தாய்கழகத்துக்கு சொந்தமானது) பிராக்டர் அண்ட் கேம்பிள் ஹோம்
பிராடெக்ட்ஸ் என்ற பெயரில் விற்பனையாகிறது. மேலும் நிறுவனம் மற்றும் தயாரிப்புகளின்
விவரம் அறிய இணையதள முகவரி http://www.pg-India.com

ஹலோ இங்கிலீஷ் செயலி (ஆப்) குறித்து
ஹலோ இங்கிலீஷ், இது ஆங்கில மொழி கற்றுத்தரும் செயலியாகும். இது இந்திய
மொழிகளில் உரையாடல் வாயிலாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள உதவுகிறது. ஜனவரி 2017
நிலவரப்படி இந்த செயலி (ஆப்) 15 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இது
பிரீமியம் கட்டணமுறையிலும் செயல்படுத்தப்படுகிறது. இந்த செயலி ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ்,
விண்டோஸ், வெப்ஆகியவற்றில்இயங்கும்.