ஏ.ஆர்.சி.சர்வதேச கருத்தரிப்பு மைய 8–வது கிளை: மதுரை பால்பண்ணை அருகே தலைமை நிர்வாகி டாக்டர். சரவணன், மகாலெட்சுமி சரவணன் துவக்கி வைத்தனர்.
மதுரை,நவ.1 : ஏ.ஆர்.சி.சர்வதேச கருத்தரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் 8–வது கிளை மதுரை பால்பண்ணை அருகே இன்று துவக்கப்பட்டது. ஏ.ஆர்.சி. சர்வதேச கருத்தரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமை நிர்வாகி டாக்டர்.சரவணன் ரிப்பன் வெட்டியும், மகாலெட்சுமி சரவணன் குத்துவிளக்கேற்றியும் துவக்கி வைத்தனர். சர்வதேச அளவில் ஐ.வி.எஃப், ஐ.யூ.ஐ. போன்ற செயற்கை கருத்தரிப்பு செய்ய அனைவராலும் அணுகப்படும் நம்பிக்கையான மருத்துவமனையாக ஏ.ஆர்.சி. சர்வதேச கருத்தரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் விளங்குகிறது. இந்த செயற்கை கருத்தரிப்பின் மூலம் பல ஆயிரத்திற்கும் மேலான தம்பதிகள் குழந்தை பேறு பெற்று தற்போது மிகவும்
சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.
டாக்டர்.சரவணன் ஏ.ஆர்.சி.சர்வதேச கருத்தரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமை நிர்வாகியாக உள்ளார். இவர் மருத்துவமனையின் இனப்பெருக்க மற்றும் பாலியல் ஆய்வாளராக திகழ்கிறார். இந்த துறையில் பல சவாலான மலட்டு பிரச்சனைகளையும் சரி செய்து வருகிறார். டாக்டர்.மகாலெட்சுமி சரவணன் மருத்துவமனையின் இனப்பெருக்க ஆலோசகராக விளங்குகிறார். ஏ.ஆர்.சி. கருத்தரிப்பு மையம் சென்னையில் எக்மோர், பெரம்பூர், பெருங்குடி ஆகிய இடங்களிலும், வேலூர், திருச்சி, திருநெல்வேலி, கோவை ஆகிய ஊர்களிலும் செயல்பட்டு
வருகிறது. தற்போது ஏ.ஆர்.சி.சர்வதேச கருத்தரிப்பு மையத்தின் 8–வது கிளையாக மதுரை – சிவங்கை ரோட்டில் உள்ள பால்பண்ணை அருகே இன்று காலை துவக்கப்பட்டது.
மையத்தின் தலைமை நிர்வாகி டாக்டர்.சரவணன் ரிப்பன் வெட்டியும், மகாலெட்சுமி சரவணன் குத்துவிளக் கேற்றியும் துவக்கி வைத்தனர். அதன் பின்னர் டாக்டர்.சரவணன், மகாலெட்சுமி சரவணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏ.ஆர்.சி. மருத்துவமனையில் தம்பதிகளில் கணவன், மனைவி என யாருக்கு குறை என்றாலும் முதலில் அவர்களின் பிரச்சினையை கண்டறிந்து அவர்களின் பிரச்சினையை முதலில் அவர்களுக்கு புரிய வைத்து அதற்கான சிகிச்சை பற்றி ஆலோசனை அளித்து அதன் பிறகே முறையான சிகிச்சை வழங்கி அவர்களை குழந்தைபேறு அடைய செய்வதே எங்களின் ஒரே இலக்கு ஆகும். உலக முழுவதும் ஆன்லைன் மூலமாக 2 கோடி மக்கள் பார்வையாளர்களாக எங்கள் மையத்தில் இருக்கிறார்கள்.
புதிதாக திறக்கப்பட்ட இந்த ஏ.ஆர்.சி. மருத்துவமனை மையத்தில் 50 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை திறப்பு ஒரு சாதனையாகவே கூறலாம்.ஏன்னென்றால் இந்தியாவிலலேயே தென் இந்திய பகுதியில் பல்நோக்கு வசதியுடன் கருத்தரிப்பு மருத்துவமனை 8–வது கிளை திறப்பது ஏ.ஆர்.சி.மருத்துவமனை மட்டும்தான். மதுரை வாழ் மக்கள் மட்டுமல்லாது அதனை சுற்றி உள்ள பகுதி மக்களுக்கும் மிகவும் பயன் உள்ள வகையில் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. எங்கள் சேவையை மதுரை வாழ் மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த மருத்துவமனை தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கிறது. வெளிநாடுகளிலிருந்தும் மருத்துவம் பெற எங்கள் மருத்துவமனைக்கு ஏராளமான தம்பதியர்கள் வருகிறார்கள். சென்னையை தலைமை இடமாக கொண்டு மருத்துவம் புரிந்தாலும் டாடா கன்செல்டிங் நிறுவனத்துடன் இணைந்து காணொலி காட்சி மூலம் மருத்துவ சிகிச்சை முறையை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.