அப்போலோ மருத்துவமனை, சென்னை வானகரத்தில் அப்போலோ ஆயூர்வைத் என்னும் ஒருங்கிணைந்த ஆயுர்வேத சிறப்பு மையத்தை ஆரம்பித்திருக்கிறது

சென்னை, 23 ஏப்ரல் 2024: இந்தியாவின் மிகப்பெரிய உடல்நல மருத்துவக் குழுமமான அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட்டின் [Apollo Hospitals Enterprise Ltd] துணை நிறுவனமான அப்போலோ ஆயுர்வைத் ஹாஸ்பிடல்ஸ் [Apollo AyurVAID Hospitals], இன்று சென்னை வானகரத்தில் அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிர்வாக துணைத் தலைவர் டாக்டர் பிரீத்தா ரெட்டி அவர்களால் அப்போலோ ஆயுர்வைத் ஹாஸ்பிடல்ஸ் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறது. அப்போலோ ஆயூர்வைத் [Apollo AyurVAID], இந்தியாவின் முதலாவது மற்றும் தேசிய விருது பெற்ற ஒரே தொடர் ஆயுர்வேத மருத்துவமனைகளாகும். மிக உயர் தரமான செயல்முறைகளால் மிகவும் நேர்த்தியாக மேற்கொள்ளப்படும் ஆயுர்வேத மருத்துவப் பராமரிப்பு, ஒருங்கிணைந்த மருத்துவப் பராமரிப்பில் முன்னோடித்துவம் பெற்றிருக்கும் ஒன்றாக இந்த புதிய மருத்துவமனையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிர்வாக துணைத் தலைவர் டாக்டர் ப்ரீத்தா ரெட்டி [Dr. Preetha Reddy, Executive Vice Chairperson of Apollo Hospitals Group] கூறுகையில், “அப்போலோ மருத்துவமனைகள் தொடர்ந்து புதுமைகளை உருவாக்கி வருவதோடு, முன்னோடித்துவமிக்க செயல்பாடுகளுடன், உடல்நல மருத்துவப் பிரிவுகளில் தொடர்ந்து முன்னணி வகித்து வருகிறது. அப்போலோ ஆயுர்வைத் மருத்துவமனையை, அப்போலோ மருத்துவமனை வளாகத்துடன் இணைந்திருக்கும் வகையில் ஆரம்பிப்பதன் மூலம் மூலம், புற்றுநோய் மற்றும் தீவிர சீரழிவு நரம்பியல், சிறுநீரகவியல் மற்றும் எலும்பியல் கோளாறுகள் [cancer and serious degenerative neurological, nephrological, and orthopedic disorders] போன்றவற்றுடன் போராடும் நோயாளிகள், தீவிரமான மற்றும் நாள்பட்ட மருத்துவ நிலைமைகள், மருத்துவ நெறிமுறைகள் அடிப்படையிலான ஸ்டெப்-டவுன் பராமரிப்பு, ஒருங்கிணைந்த மறுவாழ்வு, நோயிலிருந்து மீண்டு வாழ்தல் மற்றும் வாழ்க்கையின் இறுதி சூழலுக்கான பராமரிப்பு [acute-on-chronic medical conditions as well as protocols-based step-down care, enabling integrative rehabilitation, survivorship & end-of-life care] ஆகியவற்றில் மிகத் துல்லியமான ஆயுர்வேத சிகிச்சைகளை எளிதில் பெறமுடியும். அப்போலோ ஆயுர்வைத் மூலம், நாங்கள் மருத்துவத்தில் இரட்டை அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறோம்: ஒருபுறம் நவீன மருத்துவத்தின் அதிநவீன திறன்களை பயன்படுத்தி, நோய்களுக்கு எதிராக அசைக்க முடியாத பாதுகாப்பையும் கொடுப்பதோடு மறுபுறம் ஆயுர்வேதத்தின் காலம் கடந்தும் நிலைத்திருக்கும் ஞானத்தையும், தனிமனித ஆரோக்கியத்தையும் தொடர்ந்து வளர்த்தெடுத்து வருகிறது. இந்த ஒருங்கிணைத்து முழுத்திறனையும் வெளிப்படுத்தும் அணுகுமுறையானது, நோய்களைக் குணப்படுத்துவது மட்டுமல்லாமல் நோயாளிகளின் நல்வாழ்வையும் உத்வேகப்படுத்துகிறது. இந்த ஒருங்கிணைந்த சுகாதார மாதிரி அணுகுமுறையானது, புதிய சர்வதேச பிரிவு நோயாளிகளை, அதிலும் குறிப்பாக உலகின் வளர்ந்த நாடுகளில் இருக்கும் நோயாளிகளை வெகுவாக ஈர்க்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.’’ என்றார்.