அன்யா’ஸ் டுடோரியல் விமர்சனம்

 

அர்கா மீடியா சார்பில் ஷோபு யர்லகட்டா, பிரசாத் டெவினெனி தயாரித்து பல்லவி கங்கிரெட்டி இயக்கிய இத்தொடரில் ரெஜினா கசாண்ட்ரா, நிவேதிதா சதீஷ், பிரமோதினி பம்மி, தர்ஷ், சமீர் மல்லா, சாய் காமாட்சி பாஸ்கரலா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தத் தொடர் லாவண்யா (நிவேதிதா சதீஷ்) மற்றும் அவரது சகோதரி மது (ரெஜினா) ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு உளவியல் த்ரில்லர் கதை ஆகும்.

ரெஜினா, நிவேதிதா இருவரும் சகோதரிகள். தாயின் ஆதரவில் வளர்ப்பவர்கள். குடும்பப் பிரச்சினைகளால் மனமுடைந்த லாவண்யா சகோதரி மதுவுடன் சண்டை போட்டு, தனது வீட்டை விட்டு வெளியேறி ஒரு அபார்ட்மெண்ட்டில் வாடகைக்கு தனியாக வாழத் தொடங்குகிறாள். அந்த அபார்ட்மெண்ட்டில் அவளைத் தவிர வேறு யாரும் தங்குவதில்லை. கோவிட் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நேரமும் இதுதான். வேறு வழிதெரியாமல், தைரியமாகவும் தனிமையாகவும் இருக்கும் லாவண்யா  இன்ஸ்டாகிராமில் அன்யாஸ் டுடோரியல் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பரபரப்பாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தனது ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்து கொண்டிருக்கிறார். இது அக்கா மதுவிற்குப் பிடிக்காமல் போகிறது. தனிமையில் இருக்கும் லாவண்யா அமானுஷ்ய நடவடிக்கைகளை அனுபவிக்கத் தொடங்கும் போது கதையில் திருப்பம் எழுகிறது.  ஒரு நாள் மேக்கப் பற்றி லைவ் கொடுக்கும்போது… அவளுக்குப் பின்னால் பேய் இருப்பதைப் பின்தொடர்பவர்கள் கவனிக்கிறார்கள். அதன் மூலம் லாவண்யா சமூக வலைதளங்களில் பிரபலமாகிறாள். அன்யாஸ் டுடோரியல் பக்கத்தைப் பின்தொடர்பவர்கள் அதிகரிக்க சிலர் தங்கள் தயாரிப்புகள் மற்றும் பிராண்டுகளை விளம்பரப்படுத்த பணம் கொடுக்கிறார்கள். லாவண்யா அமானுஷ்ய நடவடிக்கைகளை அனுபவிக்கத் தொடங்கும் போது கதையில் திருப்பம் எழுகிறது. அதாவது, லாவண்யாவின் அக்கா மது (ரெஜினா) தன் தங்கை செய்வதெல்லாம் குப்பை என்கிறாள். சிறுவயதில் இருந்தே பேய், பிசாசு கிடையாது என்பது லாவண்யாவுடன் தனக்கும் தெரியும் என்கிறாள். மது செய்யும் ஒரு காரியத்தால் லாவண்யாவின் அன்யாஸ் டுடோரியல் பக்கம் பின்தொடர்பவர்களை இழக்க நேரிடுகிறது. அதன்பிறகு, இன்னொரு லைவ் செய்த லாவண்யா, தன் மூத்த சகோதரி தன்னை ஒரு குழந்தையாக எப்படி நடத்தினாள் என்று கூறுகிறார். அவள் சகோதரியுடன் இருப்பதை விட பிசாசுடன் இருப்பது சிறந்தது என்கிறார். துரதிர்ஷ்டவசமாக, இந்த திகில் கூறுகள் அவரது சகோதரி மதுவுடன் தொடர்பு கொண்டுள்ளனவா?  லாவண்யாவின் வாழ்க்கையில் என்ன திகில் மறைந்திருக்கிறது? அக்கா மதுவுடன் அவளுக்கு என்ன சண்டை? லாவண்யாவின் வாடகை வீட்டில் பேய் நடமாட்டம் உள்ளதா? இந்த கேள்விகளுக்கான பதில்களை அன்யாஸ் டுடோரியல் வெப் சீரிஸ் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.