‘அன்னபூர்ணா 2.0’ என்னும்  புதிய வடிவத்தை அறிமுகப்படுத்திய அன்னபூர்ணா மசாலா மற்றும் ஸ்பைசஸ் நிறுவனம்

சென்னைசெப்டம்பர் 4, 2020: 1975 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அன்னபூர்ணா மசாலா மற்றும் ஸ்பைசஸ் நிறுவனம், ‘அன்னபூர்ணா 2.0’ என்னும்  புதிய வடிவத்தை இன்று அறிவித்துள்ளது. 2020ம் ஆண்டில் வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் ரூ. 7,21,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் உணவு மற்றும் பானங்களின் பிரிவு மட்டும் ரூ. 1,36,990 கோடி என கணிக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைக்கும் சுவை என்னும் வாக்குறுதியுடன் வரும் எங்கள் தயாரிப்புகளின் புதிய தோற்றம் எங்கள் நிறுவனத்தின் புதிய அத்தியாயத்தை குறிக்கிறது என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு விஜய் பிரசாத் தெரிவித்தார்.

இந்த புதிய தயாரிப்பு வடிவங்களுடன், அன்னபூர்ணா நிறுவனத்தின் தற்போதைய 100 சரக்கு இருப்பு பிரிவுகளுடன் கூடிய 53 வகையான தயாரிப்புகள் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 80 வகையான தயாரிப்புகளாக விரிவு படுத்தப்படவுள்ளது. தூய்மையான மற்றும் கலவையான மசாலாப் பொருட்களின் முழு அளவையும் உள்ளடக்குவது மட்டுமல்லாமல், மிக முக்கியமாக இந்தியாவின் வளமான உணவு பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றுவதின் மூலம் மிகசிறந்த வளர்ச்சியை அன்னபூர்ணா நிறுவனம் முற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் 35,000 சதுர அடி உற்பத்தி ஆலை ஒரு நாளைக்கு 35 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்டது மற்றும் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களுக்கு ஏற்றவாறு செயல்படுகிறது.

அன்னபூர்ணா தனது தற்போதைய சில்லறை மற்றும் விநியோக வலையமைப்பை அடுத்த ஒரு வருடத்தில் 500 விநியோகஸ்தர்களுடன் வலுவாக கட்டமைக்கவுள்ளது. ஆரம்பகட்டமாக அன்னபூர்ணா நிறுவனம் தமிழகத்தின் மாநகரங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களில் 50000க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களுடன் தங்கள் விற்பனையை விரிவு படுத்துகிறது. இதைத் தொடர்ந்து புவியியல் ரீதியாக  பிற அண்டை மாநிலங்களுக்கும் இந்த விரிவாக்கம் தொடரும்.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய திரு விஜய் பிரசாத், “எங்களிடம் ஒரு சிறந்த பாரம்பரியம், வலுவான வணிகம் மற்றும் வளர்ச்சிக்கான தெளிவான பாதை வரைபடம் உள்ளது. கடந்த நான்கு தசாப்தங்களாக நாங்கள் ஒரு முன்னணி நிறுவனமாக விளங்கிவருகிறோம், மேலும் மாறிவரும் நுகர்வோர் விருப்பங்களையும், சந்தை தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். எங்கள் புதிய தயாரிப்புகளின் அடையாளம், நுகர்வோரின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்வதற்கான எங்கள் செழுமையான பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு திட்டங்களில் முதலீடு செய்வது மற்றும் மக்களுடன் இணைந்து ஒரு வலுவான விநியோகஸ்தர் மற்றும் சில்லறை விற்பனையாளர் வலையமைப்பை பின்னுவதே எங்கள் செயல் திட்டத்தின் ஒரு மிக முக்கிய அம்சமாகும். எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்களின் ஒரு பகுதியாக திறன் வாய்ந்த வடிவமைப்பு மூலோபாய குழுவில் முதலீடு செய்துள்ளோம். எங்கள் தயாரிப்புகளுக்காக புதுமையான வடிவங்களில் பேக்கிங் உத்திகளை வெற்றிகரமாக பயன்படுத்தியுள்ளோம். பல்வேறு வகையான நுகர்வோர்களை சென்றடையும் வகையில் பலதரபட்ட ஊடகங்களுடன் இணைந்து செயல்படவுள்ளோம். நிறுவனத்தின் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கும், நாடு முழுவதும் உள்ள குடும்பங்களை அடைவதற்கும் ஊடக திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது. தற்போது 40 கோடி மதிப்புடைய எங்கள் விற்பனையை அடுத்த 3 ஆண்டுகளில் 200 கோடியாக உயர்த்தவுள்ளோம்.

அன்னபூர்ணா நிறுவனம் குறித்து:

1975 களில் துவங்கியதிலிருந்து, கோயம்புத்தூரைச் சேர்ந்த அன்னபூர்ணா நிறுவனம், கலவையான மசாலா தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் மாறும் சந்தை தேவைகளை புதுமையாக மாற்றியமைப்பதில் முன்னணியில் உள்ளது. திரு. கே. தாமோதரசாமி நாயுடு அவர்களால் துவங்கபெற்று,  1980 களில் திரு ஆர்.வேலுமணி அவர்களின் தலைமையில், அன்னபூர்ணா நிறுவனம் அதன் சமையல் தயாரிப்புகளை போலவே செழுமையான மற்றும் வலுவான பாரம்பரிய விழுமியங்களின் சுருக்கமாகும். இன்று, அன்னபூர்ணாவை நிர்வாக தலைவராக, மூன்றாம் தலைமுறை குடும்ப தொழில்முனைவோர் திரு விஜய் பிரசாத் வழிநடத்துகிறார். இந்நிறுவனம் 100 சரக்கு இருப்பு பிரிவுகளுடன் தூய்மையான மற்றும் கலவை மசாலாப் பொருட்களைக் கொண்டுள்ளது மற்றும் அதன் தயாரிப்புகள் தற்போது தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும்  கிடைக்கிறது. அதன் அதிநவீன உற்பத்தி ஆலை கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள வடவள்ளியில் அமைந்துள்ளது, மேலும் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை துறைகள் ஆகியவற்றில் 400 க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.