அந்தரன் விமர்சனம்

சந்தோஷ் ராவணன் இயக்கத்தில், பிரஜின், இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், ‘அருவி’ பாலா, மு.கி. சாம்பசிவம், ரமேஷ் பாபு, அர்ஜுன் தேவ், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன், வி ஜே ராஜூ உள்ளிட்ட பலர் நடிப்பில்

கார்த்திகா என்ற இளம் பெண்ணை திருமணம் செய்ய வருகிற ஆண்கள் ஒவ்வொருவரும் மர்மமான முறையில் கொலை செய்ய படுகிறார்கள். இதனால் அவளைச் சுற்றி பயமும் சந்தேகமும் ஏற்படுகிறது. இந்த தொடர்ச்சியான மர்ம கொலைகளை விசாரிப்பதற்க்காக செழியன் என்ற அதிகாரி நியமிக்கப்படுகிறார். 

விசாரணை செய்யச் செய்ய, கார்த்திகாவின் கடந்த காலத்தில் நடந்த பல  ரகசியங்கள் மறைந்திருப்பது தெரிய வருகிறது. இந்த மரணங்களுக்கு உண்மையான காரணம் என்ன? கார்த்திகாவுக்கும் இந்த சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு? என்பதே அந்தரன் படத்தோட மீதிக்கதை.

பிரஜின் கதாநாயகனாக கதையின் உணர்வுகளையும் போராட்டங்களையும் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். பல இடங்களில் அவரது நடிப்பு கதைக்கு நம்பகத்தன்மையை சேர்க்கிறது.

இவானா வருண் கதாநாயகியாக அளவான நடிப்பை வழங்கியுள்ளார். உணர்ச்சிகரமான காட்சிகளில் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

அனுபமா குமார் அனுபவமிக்க நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார். அவர் வரும் காட்சிகள் கதையின் தாக்கத்தை உயர்த்துகின்றன.

வருண் மற்றும் ஆதிரன் பத்மன் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை வழங்கி கதையின் ஓட்டத்திற்கு உதவியுள்ளனர்.

‘அருவி’ பாலா தனது இயல்பான நடிப்பாலும், சில இடங்களில் நகைச்சுவை மற்றும் உணர்ச்சி கலந்த வெளிப்பாட்டாலும் கவனம் ஈர்க்கிறார்.

அந்தரன் திரைப்படத்தில் நடித்துள்ள கலைஞர்கள் அனைவரும் கதைக்கு தேவையான உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக பிரஜின் மற்றும் இவானா வருண் ஆகியோரின் நடிப்பு படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

தயாரிப்பு நிறுவனம் : ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ்

தயாரிப்பாளர் : மு.கி. சாம்பசிவம்

இயக்கம் : சந்தோஷ் ராவணன்

ஒளிப்பதிவு : கிஷோர் ராமச்சந்திரன்

இசை : ஹரி எஸ் ஆர்

படத்தொகுப்பு : இக்னேசியஸ் அஸ்வின் மற்றும் சதீஷ் குரோசாவா

கலை இயக்கம் : சசிகுமார் 

மக்கள் தொடர்பு : நிகில்முருகன்