‘அமிகோ கேரேஜ்’ விமர்சனம்

பீப்பிள் புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில், முரளி ஸ்ரீனிவாசன், ராமச்சந்திரன் பெருமாள், பிரியா கதிரவன், அஸ்வின் குமார் விஜி தயாரிப்பில், பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில், ‘மாஸ்டர்’ மகேந்திரன், ஜி.எம்.சுந்தர், தமிழாக, தீபா பாலு, தசரதி, முரளிதரன் சந்திரன், சிரிக்கோ உதயா, மதன் கோபால், சக்தி கோபால், முரளி கமல் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ‘அமிகோ கேரேஜ்’.

பள்ளியில் படிக்கும் போது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக விளையாடி சிகரெட், மது என்று தன்னுடைய வாழ்க்கையை போக்கி வருகிறார் நாயகன் மகேந்திரன். டியூஷன் செல்லும் இடத்தில்   தன்னைவிட வயதில் மூத்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதல் செய்கிறார். ஆனால் அந்தப் பெண்ணோ அட்வைஸ் செய்து அனுப்பி விடுகிறார்.

பள்ளியில் ரெக்கார்ட் செய்யாததால் ஆசிரியர் தண்டனை கொடுக்கிறார் அந்த ஆசிரியரை பழிவாங்க அமிகோ கேரேஜ் நடத்தி வரும் ஜிஎம் குமாருடைய உதவியை கேட்கிறார். இதன் மூலம் மாஸ்டர் மகேந்திரன் ஜிஎம் குமாருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு ஏற்படுகிறது. 

எப்படியோ ஒரு வழியாக கல்லூரி படிப்பை முடித்து நல்ல சம்பளத்துடன் ஒரு நல்ல வேலையில் இருந்து வரும் மாஸ்டர் மகேந்திரன், அங்கே வேலை செய்யும் போது ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை இழந்த அதிராவை காதலிக்கிறார்.

இந்த சமயத்தில் முரளிதரன் சந்திரன் அந்த பகுதியில் ஒரு மிகப்பெரிய ரவுடியாக இருக்கிறார் அவரின் எடுபுடியான தாசரதிக்கும் மாஸ்டர் மகேந்திரனுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது.

இப்படி பிரச்சனை ஏற்பட்டு போதைக்கு அடிமையாகும் மாஸ்டர் மகேந்திரன் ஒரு கட்டத்தில் ஒரு கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு செல்கிறார்.  எதற்காக  கொலை செய்தார்? யாரை கொலை செய்தார்? ஜெயிலில் இருந்து திரும்பி வந்தாரா? இல்லையா? காதலித்த பெண்ணை திருமணம் செய்தாரா? இல்லையா? என்பதை அமிகோ கேரேஜ் படத்தோட மீதி கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு : முரளி ஸ்ரீனிவாசன் (பீப்பிள் புரொடக்ஷன் ஹவுஸ்)

ராமச்சந்திரன் பெருமாள், பிரியா கதிரவன், அஸ்வின் குமார் விஜி 

இயக்குனர் : பிரசாந்த் நாகராஜன்

எடிட்டர் : ரூபன் – சிஎஸ் பிரேம்குமார்

டாப் : விஜயகுமார் சோலைமுத்து

இசை : பாலமுரளி பாலு

கலை : ஸ்ரீமான் பாலாஜி

ஸ்டண்ட் : டான் அசோக்

பாடல் வரிகள் : கு. கார்த்திக்

மக்கள் தொடர்பு : சதீஷ் (எய்ம்)

தயாரிப்பு நிர்வாகி : எஸ்.ஆர்.லோகநாதன்

விளம்பர வடிவமைப்பு : சபா வடிவமைப்புகள்