நாளை அனைத்து அதிமுக எம்எல்ஏக்களையும் முதல்வர் சந்திக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து எம்எல்ஏக்களும் நாளை சென்னையில் உள்ள தலைமை செயலகத்திற்கு வர வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நாளை காலை 10 மணி முதல் மாவட்ட வாரியாக எம்எல்ஏக்களை சந்திக்க முதல்வர் முடிவு செய்துள்ளார். அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்களை அப்பகுதி அமைச்சர்களுடன் சந்திக்க முடிவு செய்துள்ளார்.