வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம்

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா, ராஜ்கிரணுடன் மாணிக்கம் உள்ளிட்ட பல படங்களில் வருமான வனிதா விஜயகுமார் எப்போதுமே பரபரப்பாக காணப்படுபவர். சர்ச்சைகளின் நாயகியாகவே வலம் வருபவர். அப்பா விஜயகுமாருடன் சொத்து தகராறு, கணவருடன் குழந்தையை கேட்டு தகராறு, காவல் நிலையம் செல்வது, கண்டபடி பரபரப்பு பேட்டி அளிப்பது என்றெல்லாம் துணிச்சலாக பரபரப்பை ஏற்படுத்தி கொண்டே இருப்பார். சிறிது காலம் அமைதியாக இருந்து வந்த வனிதா கடந்த வருடம் தனியார் சேனலில் நடைபெற்ற “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புரட்சிகர கருத்துகளை எல்லாம் பேசி சண்டை போட்டு பரபரப்பை உண்டாக்கினார்.

யூடியூப் சேனல் நடத்துவது, டிவி சேனல்களின் நிகழ்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது என்று தற்போது பிசியாக இருந்த வனிதா மீண்டும் திருமணம் செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறார்.இவர் தனது முதல் கணவர் டிவி நடிகர் ஆகாஷ், 2-வது கணவர் ஆனந்தராஜன் ஆகியோரிடமிருந்து விவாகரத்து பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு திரைப்பட டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடன் நெருக்கமாக வாழ்ந்து வந்த வனிதா விஜயகுமார் ராபர்ட் மாஸ்டரின் ஆசைக்காக அவரை ஹீரோவாக நடிக்க வைத்து “எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்” என்ற படத்தை தயாரித்தார். இந்தப் படம் கசப்பான அனுபவத்தை தந்தது. அதனால் ராபர்ட் மாஸ்டர் உடனான உறவும் முடிந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் தனது யூடியூப் சேனலுக்காக சில உதவிகள் செய்த திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான பீீ்ட்டர்பால் என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறார். திருமணத்திற்கு குறிப்பிட்ட சிலர் மட்டுமே அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் திருமணம் வருகிற ஜூன் 27ஆம் தேதி சென்னையில் உள்ள வனிதாவின் வீட்டில் மாலைை 4 மணி அளவில் எளிமையாக நடைபெறுகிறது. நெருங்கிய உறவினர்கள் மத்தியில்… ஊரடங்கு விதிகளின்படி நடைபெறுவதாக அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பி இருக்கிறார் வனிதா.

இந்த திருமணம் நடைபெறுவது குறித்து தனது மகள்களிடம் சம்மதம் கேட்டதாகவும் அவர்களும்” கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று மகிழ்ச்சியுடன் கூறியதாகவும் தெரிவிக்கிறார் வனிதா.