நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 16-வது நினைவு தினத்தை முன்னிட்டு நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் பலர் மெரினா கடற்கரையிலுள்ள அவரது சிலைக்கு இன்று மாலையணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின் கூறும்போது, சிவாஜிக்கு சிலை வைக்கப்படுவதே, தமிழக அரசு அவருக்கு செய்யும் மரியாதை என்றும் சிலையை எங்கு வைத்தாலும் தங்களுக்கு மகிழ்ச்சி. நடிகர் திலகம் எங்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று கூறினார்.