நடிகர் கிருஷ்ணா மற்றும் இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் தந்தை “பட்டியல்” சேகர் காலமானார்

நடிகர் கிருஷ்ணா மற்றும் இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் தந்தையுமான ‘பட்டியல்’ சேகர் இன்று காலை காலமானார்.  ‘ராஜதந்திரம்’, ‘கழுகு’, ‘ஆலிபாபா’ உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் திரைப்பட தயாரிப்பாளரும் கூட. கடந்த சில நாட்களாக இவர் உடல்நல குறைவால் அவஸ்தைப்பட்டு வந்தார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை ‘பட்டியல்’ சேகர் திடீரென்று காலமானார்! மறைந்த சேகரின் உடலுக்கு திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும், ரசிகர்களும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ‘பட்டியல்’ சேகரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ‘vtv24x7.com இணையத்தளம்’ தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.