நிலவேம்புக் கசாயம் குறித்து மக்களிடம் பீதி கிளப்பும் நடிகர் கமல்ஹாசன் சமூக விரோதி என்று அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் கமலஹாசனைப் போன்றவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றார். தீபாவளி வெளியீட்டு திரைப்படங்களுக்கு, திரையரங்குளில் அதிக கட்டணம் வசூலிப்பது முறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடம்பூர் ராஜு தெரிவித்தார்