புயலால் பாதிக்கப்பட்ட இந்த மக்களின் அவலம் சொல்லில் அடங்காதது-

திரையில் வரும் கதாநாயகர்கள் நிழலில் மட்டுமல்ல, நிஜத்திலும் நாயகர்களாக வலம் வரும் தருணங்கள் உண்டு. சமீபத்தில் தமிழகத்தின் டெல்டா பகுதியில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகள் பல நிஜ நாயகர்களை அடையாளம் காட்டி உள்ளது. அதில் அருண் விஜயும் ஒருவர். பாதிப்பு அடைந்த பகுதிகளில் தன்னுடைய நேரடி கண்காணிப்பின் பேரில் நிவாரண பணியினை மேற்கொண்டு உள்ளார். 

நிவாரண பணியினை மேற்கொண்டவாறு அவர் கூறியதாவது “புயலால் பாதிக்கப்பட்ட இந்த மக்களின் அவலம் சொல்லில் அடங்காதது. வெறும் பண மற்றும் பண்ட  உதவி மட்டுமே அவர்களின் துயரை ஆற்றாது. நாம் நேரிடையாக களத்தில் இறங்கி பணியாற்றும் அந்த சேவை மனப்பான்மை அவர்களுக்கு மேலும் ஊக்கமும் நிம்மதியும் தரும். இந்த அறிக்கையின் வாயிலாக இளைஞர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால் “நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்பதை பாதிக்கப்பட்டோருக்கு உணர்த்துங்கள். அது அவர்களுக்கு எதையும்  எதிர்கொள்ளும் மனவலிமையை தரும் ” என்கிறார்.