மதுரையில் பால் விற்பனை அளவையில் முறைகேடு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை மாவட்ட தொழிலாளர் மற்றும் தர நிர்ணயதுறை ஆய்வாளர் சாந்தி தலைமையிலான அதிகாரிகள் பால் விற்பனையகங்களில் திடீர் ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வில் பால் அளவைகளை நெளிந்தும், வளைத்தும் விற்பனையில் முறைகேடு செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மதுரை வில்லாபுரம், ஊமச்சிகுளம், பழங்காநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் முறைகேடாக பயன்படுத்தப்பட்ட 250 பால் ஊற்றல் அளவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து விளக்கம் கேட்டு பால் விற்பனையகங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. பால் விற்பனையில் முறைகேட்டில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.