ஆலக்காலம் விமர்சனம்

ஸ்ரீ ஜெய் பிரடக்சன் ஜெய் கிருஷ்ணா தயாரிப்பில் ஜெய் கிருஷ்ணா இயக்கத்தில் ஜெய் கிருஷ்ணா சாந்தினி ஈஸ்வரி ராவ் டிபாசங்கர் தங்கதுரை சிசர் மனோகர் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஆலக்காலம்.

குடிப்பழக்கத்தால் கணவனை இழந்து தனி ஆளாக நின்று நாயகன் ஜெயகிருஷ்ணாவை வளர்க்கிறார் தாய் ஈஸ்வரி ராவ். பல வேலைகள் செய்து பிள்ளையை நன்கு படிக்க வைக்கிறார். சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் தன் மகனை சேர்த்து படிக்க வைக்கிறார். நன்றாக படித்து ஒரு நல்ல வேலைக்கு சென்றால் நிலைமை மாறிவிடும் என்று நம்பிக்கையில் இருக்கிறார் ஈஸ்வரி ராவ்.

இந்நிலையில், ஜெய் கிருஷ்ணாவின் நடத்தை மற்றும் படிப்பு ஆகியவற்றால் அவர் மீது காதல் வயப்படுகிறார் சாந்தினி.
காதலை ஜெயகிருஷ்ணாவும் ஏற்றுக் கொள்கிறார்.

ஒரு கட்டத்தில் இவர்களின் காதலால் கல்லூரியில் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் கல்லூரியில் இருந்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை தொடங்குகிறார்கள்.

ஆனால் ஜெய் கிருஷ்ணா குடிக்கு அடிமையாகி விடுகிறார். இந்த குடிப்பழக்கம் அவர்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட பிரச்சனைகளை உண்டாக்குகிறது என்பதையே ஆலக்காலம் படத்தோட மீதி கதை.