கோவில்பட்டி வ.வு.சிநகரைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவரது மகன் கேதிர்நாத்(12) மேற்கு காவல் நிலையம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். இதேப்போன்று அதே பள்ளியில் செக்கான்ஊரணி தெருவைச் சேர்ந்த செல்வசங்கர் என்பவரது மகன் சுதர்சனம்(13) 8ம் வகுப்பு படித்து வருகிறான். ஒரே பள்ளி என்பதால் கேதிர்நாத்தும், சுதர்சனமும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது.
நேற்று இருவரும் வீட்டில் இருந்து வெளியே விளையாட சென்றவர்கள் வீட்டிற்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இரண்டு மாணவர்களின் பெற்றோர்களும், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பஸ் நிலையம், ரெயில் நிலையம் என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து 2 மாணவர்களின் பெற்றோர்களும் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.