சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதன்படி, சுதந்திர போராட்ட தியாகிகளின் மாதாந்திர ஓய்வூதியம் 12,000 ரூபாயில் இருந்து 13,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. விடுதலை போராட்ட வீரர்களின் குடும்ப ஓய்வூதியம் 6,000 ரூபாயில் இருந்து 6,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ஓய்வூதிய உயர்வு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர்கள், வ.உ.சி வழித்தோன்றல்களுக்கான ஓய்வூதியமும் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.