ஜெயலலிதாவுக்கு அரசியல் வாரிசுகள் இல்லை – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமத்துவ கொள்கையின் காரணமாகவே ஒரு சாதாரண விவசாயின் மகனான என்னால் இத்தகைய பதவிக்கு வர முடிந்தது. கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு ஜெயலலிதா என்றுமே இரக்கம் காட்டியது கிடையாது. ஜெயலலிதா தனக்கான அரசியல் வாரிசாக யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை.  உண்மை, கடின உழைப்பு மற்றும் ஆளுமை இருக்கும் யார் வேண்டுமானாலும் கட்சியின் உயரிய பொறுப்புக்கு வர தகுதியானவர்கள். அம்மா காட்டிய வழியில் நடக்கும் ஆட்சியை கலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் கட்சிக்கு உண்மையான தொண்டர்கள் என் பக்கம் இருந்ததால் அது நடக்கவில்லை. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் கடின உழைப்பால் தான் கட்சி இன்று இவ்வளவு பெரிய நிலைக்கு வந்துள்ளது. இந்தியாவிலேயே முதலீட்டாளர்களை கவரும் மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. 2015-ஆம் நடத்தப்பட்டது போல் 2018-ஆம் ஆண்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் வரும் காலங்களில் வேலை வாய்ப்புகள் அதிகமாகும் என்றார்.