‘விடுமுறையில் வகுப்பு நடத்தினால் நடவடிக்கை’- அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். முதன்மை கல்வி அலுவலர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோபியில் அவர் பேட்டி அளித்திருந்தார். மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிகள், மிதிவண்டிகள் விரைவில் வழங்கப்படும் என்று தெரிவித்த அவர், விளையாட்டுத் துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரவும் அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.