பள்ளிக்கு செல்லும் இளம் மங்கையாக வரும் டெல்லாவின் பெற்றோர் மகளை என்ன செய்கிறாள் என்பதை கண்காணிப்பதில்லை. மேலும் மகளுக்கு மொபைல் போன், கணினி, இணையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கின்றனர். அதன்விளைவாக பள்ளிக்கும் மொபைல் போனை எடுத்துச் செல்லும் டெல்லா, பாடத்தை கவனிக்காமல் தனது காதலுடன் குறுஞ்செய்தியை பகிர்ந்து வருகிறார்.
இவ்வாறாக பள்ளி செல்லும் டெல்லாவுக்கு சமூக வலைதளம் மூலம் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாகவும் மாறிவிடுகிறது. அந்த காதலால் டெல்லாவுக்கும் அவரை காதலிக்கும் நபருக்கும் இடையேயான நெருக்கம் அதிகமாகி, அடுத்தடுத்த கட்டத்திற்கும் செல்கின்றனர். அதனால் டெல்லா சந்திக்கும் பிரச்சனைகள்? அவளது பெற்றோர் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதனால் என்னென்ன மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்? என்பதே படத்தின் மீதிகதை.
இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்