இந்த கல்வியாண்டு முதல், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமல்லாமல் 11ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்நிலை வகுப்புக்கான மொத்த மதிப்பெண்களும் பிளஸ் 1க்கு 600, பிளஸ் 2-வுக்கு 600 என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பிளஸ் 1 பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. மாதிரி வினாத்தாளை வெளியிட்டு அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ” இந்த வினாத்தாள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். மத்திய அரசு எந்தத் தேர்வை கொண்டு வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் இந்த வினாத்தாள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக தமிழ், ஆங்கிலம் பாடங்களின் மாதிரி வினாத்தாள் உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற பாடங்களுக்கு மாதிரி வினாத்தாள் விரைவில் வெளியாகும்” என்றார்.