மு.க.ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

 

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இந்த வெற்றியை எதிர்த்து சைதை துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். அதில் ஸ்டாலின் வெற்றிபெற்றது செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து சைதை துரைசாமி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அதை தொடர்ந்து ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கும் விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.