என் குரலை வலுபடுத்த யாருக்கு துணிச்சல் உள்ளது? – கமல்

நடிகர் கமல் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் இரண்டு தகவல்களை பதிவிட்டுள்ளார்.

முதல் பதிவில் “பெரும் விபத்துகள் மற்றும் ஊழலுக்காக ராஜினாமா செய்ய வேண்டும் என்றால்
தமிழக முதல்வர் பதவி விலக பிற கட்சிகள் கோரிக்கை விடாதது ஏன்? நிறைய குற்றங்கள் நடந்து விட்டன. என் குரலை வலுபடுத்த யாருக்கு துணிச்சல் உள்ளது? இதற்கு உதவி புரியும் கருவிகள் தான் திமுக, அதிமுக மற்றும் இதர கட்சிகள். இந்த கட்சிகள் சரியில்லை எனில் வேறு கட்சிகளை தேடுவோம்” என்றும்

அதை தொடர்ந்து மற்றொரு பதிவில் “ஊழலலிருந்து நாம் சுதந்திரம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே புதிய சுதந்திர போராட்த்திற்க்கு சூளுரைக்க துணிவுள்ளவர் வாரும், வெல்வோம்.” என்று தெரிவித்துள்ளார்