சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதனுக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை 71வது சுதந்திர தினம் நடைபெறுவதை யொட்டி, குடியரசுத்தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தவிர, கூடுதல் ஆணையர் ஷேசாயி, கூடுதல் எஸ்பி சி.ராஜாவுக்கும் குடியரசுத்தலைவர் பதக்கம் வழங்கப்பட இருக்கிறது.