விவசாயிகள், சுதந்திரதின விழாவை புறக்கணிக்க முடிவு

சுதந்திரதின விழாவை புறக்கணிக்க கடலூர் மாவட்ட எய்யலூர் கிராமத்தில் அனைத்து விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. கொள்ளிடம் ஆற்றில் கூட்டுகுடிநீர் திட்டம் என்ற பெயரில் ரூ.1.45 கோடி லிட்டர் நீர் உறிஞ்சப்படுவதாக புகார் தெரிவித்த சங்கத்தினர், ஆதனூரில் ரூ.450 கோடியில் தடுப்பணை கட்டப்படும் என்று அரசு அறிவித்தும் பணிகளை தொடங்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கத்தினர், அறிவித்துள்ளனர்.