சட்ட ஒழுங்கு பிரச்சனையை ‘பிக்பாஸ்’ ஏற்படுத்தவில்லை

பிக்பாஸ் நிகழ்ச்சியால் கலச்சார சிரழிவு ஏற்படுவதால் அதற்கு தடை கோரி வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடைகோரும் வழக்கில் கமலஹாசன் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

பதில் மனுவில், “பிக்பாஸ் நிகழ்ச்சியால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படவில்லை. இந்த வழக்கில் தமிழக அரசை சேர்த்தது தவறு, மத்திய அரசு அல்லது கண்காணிப்பு குழு மட்டுமே ஆராய முடியும்!” எனவும் தெரிவிக்கப்பட்டது.  இதனையடுத்து, மத்திய அரசு பதிலளிக்க ஒருவாரம் அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம், விசாரணையை ஒத்திவைத்துள்ளது.