பார்த்திபனை பார்த்துப் பயந்த நிவேதா பெத்துராஜ்

 

உதயநிதிஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ள ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தில் அவருடைய ஜோடியாக நடித்திருப்பவர் நிவேதா பெத்துராஜ். இதற்கு முன் அவர், ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் நடித்திருந்தார் .‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தில் பார்த்திபன் மகளாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடித்தது குறித்து நிவேதா கூறுகையில், “இந்த படத்தில் பார்த்திபன் எனது அப்பாவாக நடிக்கிறார் என்றதும் சந்தோ‌ஷமாக இருந்தது. அதே நேரத்தில் அவர் பெரிய நடிகர். அவருடன் எப்படி நடிக்கப்போகிறோம் என்ற பயமும் எனக்கு ஏற்பட்டது. கிளைமாக்ஸ் காட்சியில் அவருடன் சேர்ந்து நடித்த போது படபடப்புடன் பயந்தபடி நின்றேன். அதைப்பார்த்த பார்த்திபன் சார், அதில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை எனக்கு சொல்லிக் கொடுத்து எனது பயத்தைப் போக்கினார். இதனால் அந்தக் காட்சியில் என்னால் சிறப்பாக நடிக்க முடிந்தது. இந்த படத்தில் எனது நடிப்புக்கு கிடைக்கும் எல்லாப் பாராட்டுகளும் அவரைத்தான் சாரும்” என்றார்.