வகை வகையான சோளம்

சோளம் என்பது புல் வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரப் பேரினம் ஆகும். இவற்றுள் சில தானியங்களுக்காகவும் வேறு சில கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. சில வகைகள் மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளர்கின்றன. இப்பயிர் உலகம் முழுதும் மிதமான வெப்பம் கொண்ட பகுதிகளில் பயிராகின்றன. இது மனிதர்களின் முக்கியமான உணவுப் பொருள்களுள் ஒன்றாகவும் ஆப்பிரிக்காவின் முதன்மை உணவாகவும் இருக்கிறது.