தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கல்வியில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதற்காக தீவிரமான ஆய்வுக்குப்பிறகு சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் அரசியல்வாதிகள் தலையிட்டு மாணவர்களை குழப்பி, நிலையான முடிவு எடுக்க முடியாத நிலைக்கு தள்ளிவிட்டார்கள். இதனால் அரசியலுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
மாணவர்களின் கல்வித்தரம்தான் பாதித்துள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வை தமிழ் வழியில் படித்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதி இருக்கிறார்கள். அவர்களில் 4 ஆயிரம் பேர் பாஸ் ஆகி இருக்கிறார்கள். நமது மாணவர்கள் திறமையானவர்கள். அவர்களை ஊக்குவிப்பதை விட்டு தொடர்ந்து நீட் தேர்வு வேண்டாம் என்று மு.க. ஸ்டாலின் கூறி வருகிறார். இவர்கள் ஆண்ட காலத்தில் மாணவர்களை அகில இந்திய போட்டி தேர்வுகளை சந்திக்கும் வகையில் தயார் செய்து இருக்க வேண்டும். அவர்கள் செய்த தவறை மறைக்க மீண்டும், மீண்டும் மாணவர்களை குழப்பி திசை திருப்ப கூடாது என்று கூறினார்