அவர் தனது வேண்டுகோள் ஒன்றில், “ அசாம், குஜராத் மாநிலங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். மனிதர்களின் இழப்பு மட்டுமின்றி நிதியிழப்பும் ஏற்பட்டுள்ளது. இயற்கையின் முன்னால் நாம் உதவியின்றி இருக்கிறோம்; ஆனால் அங்கிருக்கும் மக்களுக்கு உதவி செய்ய முடியும்” என்றார். முதல்வர் சோனாவால் அமீர் கானின் நிதியுதவிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அமீர் கான் கடந்த காலங்களில் அசாமிற்கு குடும்பத்தினருடன் பலமுறை போயிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுவரை அசாமில் 80 பேர் பலியாகியுள்ளனர். மத்திய அரசு இறந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளது. படுகாயம் அடைந்தோருக்கு ரூ. 50,000 நிவாரணம் அளித்துள்ளது. இவ்வருடத்தில் அம்மாநிலத்தில் இரண்டு முறை வெள்ளம் ஏற்பட்டு 25 லட்சம் மக்களை பாதித்துள்ளது.