தமிழ், மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகை பாவனாவை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கடந்த ஜூலை 10ஆம் தேதி மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு கேரளா ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு நடிகர் திலீப் அங்கமாலி நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
ஆனால், சாட்சியைக் கலைக்க வாய்ப்புள்ளதாக அரசு வழக்கறிஞர் கூறியதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் திலீப்பின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றத்தில் திலீப் ஜாமீனில் விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், கேரள உயர்நீதிமன்றமும் திலீப்பின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.