பிக்பாஸ் நடிகைக்கு சம்மன்

தெலுங்கில் வெளிவந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிக்கும் நடிகை முமைத்கானுக்கு போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பி நேரில் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கெல்வின் என்பவரை போதை பொருள் கடத்தல் தொடர்பாக காவல்துறை கைது செய்தது. அவரிடம் நடைபெற்ற விசாரணையில் ஐதராபாத்துக்கு போதை பொருட்களை கடத்தி வந்து பியூஸ் என்பவர் மூலம் நடிகர், நடிகைகளுக்கு சப்ளை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். போலீசார் பியூஸின் செல்போனை ஆய்வு செய்தனர்.

அதில் ஏராளமான நடிகர், நடிகைகள் எண்கள் இருந்தன. இந்த விவகாரத்தில் நடிகர்கள் நவ்தீப், நடிகைகள் சார்மி, முமைத்கான் உள்பட திரையுலகை சேர்ந்த 12 பேருக்கு, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பி நேரில் ஆஜராக அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் நடிகை முமைத்கானுக்கு எங்கு சம்மன் அனுப்ப என்று குழம்பினர். ஏனென்றால், அவரது வீடு மும்பையில் இருக்கிறது. இதையடுத்து தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டிருப்பது தெரிய வந்தது. அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களை தொடர்பு கொண்டு வரும் 27ஆம் தேதி அவரை ஆஜராக சொல்லும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.