இருளை இசையாக்கும் சாம் சி எஸ்… ‘டிமான்டி காலனி 3’ முதல் பாடல் ‘ரத்தத்த தா’ வெளியானது!

 

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் ‘டிமான்டி காலனி 3’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ரத்தத்த தா’ வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

மோகன் ராஜன் எழுதியுள்ள பாடல் வரிகளுக்கு சாம் சி எஸ் இசையமைத்து, தனது குரலில் பாடியுள்ளார். ஹாரர் மற்றும் டார்க் தீம் கலந்த இந்தப் பாடல், படத்தின் இருண்ட உலகத்தையும் வில்லனின் நரகப் பின்னணியையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பாடலின் இசை, குரல் மற்றும் சவுண்ட் டிசைன் ஆகியவை இணைந்து ஒரு மிரட்டலான ஹாரர் அனுபவத்தை வழங்குகின்றன. குறிப்பாக ரத்தச் சிவப்பு பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள காட்சிகள் பாடலின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கின்றன.

‘டிமான்டி காலனி 2’ படத்தின் பின்னணி இசை மூலம் ரசிகர்களை கவர்ந்த சாம் சி எஸ், தற்போது ‘டிமான்டி காலனி 3’ படத்திலும் தனது தனித்துவமான இசை பாணியை வெளிப்படுத்தியுள்ளார்.

அஜய் ஞானமுத்து – அருள்நிதி – சாம் சி எஸ் கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் மீது ஏற்கனவே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில், ‘ரத்தத்த தா’ பாடலின் வெளியீடு அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.