Zee Studios மற்றும் MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சேட்டன் DK இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த சமூக அக்கறை கொண்ட நீதிமன்ற பின்னணித் திரைப்படம், நச்சு பூச்சிக்கொல்லி விவசாயம் மனித உடல்நலத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
புதிய போஸ்டரில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே மீது பொதுமக்கள் கோபமாக காய்கறிகளை வீசும் காட்சி இடம்பெற்றுள்ளது. “Slow Poison in Progress…” என்ற வாசகம், படத்தின் மையக் கருத்தை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படம், ஜூலை 24, 2026 அன்று இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

